மூன்று தலைமுறையும் உட்கார்ந்து
சாப்பிடட்டும் என்று என்
முப்பாட்டனோ பாட்டனோ
எதையும் சேர்த்து வைக்கவில்லை.!
மகப்பிள்ளைகளின் மகிழ்விற்கு
ஊருக்கு மேற்க்கே
முன்னூறு ஏக்கரை
எழுதி வைத்துவிட்டுச் சாகவில்லை
என் அன்புத் தாத்தா.!
மழைக்கும் ஒதுங்காத
பள்ளிக்கூட அறைகளில்
மகனைப் படிக்க வைத்தார்
என் தந்தை.!
காசில்லாமல் கஷ்டப்படும் அப்பா.!
கான்வென்டில் அவர்
கனவுகளை சுமந்து நான்.!
பட்டிக்காட்டு பாட்டாளிக்கும்
பாரின் கனவு பலிக்கணும்
எட்டு வைத்து நீ நடடா,
ஏழு கடலென்ன எட்டுக்
கடலையும் தாண்டலாம்!
உனக்கு நான் எனக்கு நீஎன்று
இப்படி ஒரு தோழன்
எவர்க்கும் கிடைக்காத வரம்.!
இப்படி
நடப்பதை யாவும் ரசிக்கிற மனமிருந்தும்
தோல்வியும் சோகமும்
துரத்தத் தான் செய்கிறது
நம்மை!
விதியைசொல்லி என்ன பயன்?
விட்டுவிடு அது போகட்டும்.!
உன்னைத் தலைவனாக்கி பார்க்கும் வரை
ஓயப்போவதில்லை நான்.!
ஒன்றுமே இல்லாத போதும்
ஓவ்வொன்றிலும் இருக்கும்
உண்மையை ரசி !
வாழ்க்கை கொஞ்சம் கூட கடினமில்லை!
அனுபவிக்கத் தெரிந்தவனுக்கும்!
அன்பு செய்யத் தெரிந்தவனுக்கும்!
ஏழை வீட்டில் பிறந்ததற்குப்
பெருமைப்படு !
எதுவுமில்லாமல் நீ உயர்ந்தால் தான்
அது வெற்றி!
என்றார்.!
கடவுள் இருக்கிறாரோ
இல்லையோ தெரியவில்லை!
எனக்கு என் தந்தை இருக்கிறார்.!
அது போதும்!