அர்த்தமுள்ள தமிழின் ‘ஓர்’ எழுத்துக்கள்

அர்த்தமுள்ள தமிழின் ‘ஓர்’ எழுத்துக்கள்!


தமிழ் மொழி பலவித சுவை மிகுந்தது. அமிர்தம் போல இனிமையானது. கேட்க இனிமை, பேச அருமை, படிக்க எளிமை. தமிழ் கடலில் ஆழ்ந்து மூழ்கினால் நல் முத்துக்களை பெறலாம். இன்பத்தமிழ் மொழி பேசும் தமிழனாய் பிறந்ததே ஒரு பெரு மைதான். அதை உணரவேண்டிய தருணம் இதுதான். முத்தமிழ் வித்தகர் கலைஞர், தமிழுக்கு பெருமை சேர்க்க பெருவிழா நடத்தும் இந்த காலம் தமிழுக்கு பொற்காலம். உலக தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் இந்த நேரத்திலாவது தமிழ் மொழியின் அழகையும், பெருமையையும் சற் றேனும் சிந்தித்து பார்ப்போம். தமிழன் பெருமைக்குரியவன் என்பதை உண ர்ந்து தலை நிமிர்ந்து நிற்ப்போம். அழகிய தமிழ் மொழியில் அற்புதங்கள் பல உள்ளன. எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. அதில் ஒன்று “ஓர் எழுத்து ஒரு பொருள்“ என்னும் சிறப்பு ஆகும். அதாவது தமிழில் ஒரு எழுத்து கூட பொருள் தரக்கூடியது. இதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர். தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் தனித்து நின்றாலும் பொருள் கொடுக்கும். அது எப்படி என்கிறீர்களா. அதுதான் நம் தமிழ்மொழியின் தனிச்சிறப்பு அந்த 42 எழுத்துக்களையும் அதன் பொருளையும் பார்ப்போம்.

ஆ- பசு, எருது, ஆச்சா மரம்

ஈ- பறக்கும் பூச்சி, தேனீ, வண்டு, அழிவு, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு

ஊ- இறைச்சி, உணவு, விகுதி.

ஏ- அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு

ஐ- அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்

ஒ- சென்று தாக்குதல், மதகுநீர், ஒழிவு, பலகை

மா-பெரிய, நிலம், விலங்கு, மாமரம்

மீ- மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு

மூ- மூப்பு(முதுமை),மூன்று

மே- மேல், மேன்மை

மை- கண்மை, கருமை, இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்

மோ- முகர்தல்

தா- கொடு, குறை, கேடு, குற்றம், பகை

தீ-நெருப்பு, இனிமை, அறிவு, இடம்

தூ- வெண்மை, இறைச்சி, பறவை இறகு

தே- கடவுள்

தை- தைமாதம், தையல், திங்கள்

பா& அழகு, பாட்டு, நிழல்

பூ- மலர், சூதகம்

பே- அச்சம், நுரை, வேகம்

பை- கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை

போ& செல்

நா& நாக்கு, தீயின் சுவாலை

நீ& நீ

நை- வருந்து, இகழ்ச்சி

நோ-நோவு, துன்பம், வலி

கா- சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்

கூ- பூமி, ஏவல், கூழ், கூவு

கை- உடல் உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள்,

கோ- வேந்தன், தலைவன், இறைவன், அரசன்

வா- வருகை

வீ- மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு, வீழ்தல்

வை& வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்

வெ- வவ்வுதல்,

சா- சாதல், சோர்தல், பேய், மரணம்

சீ- வெறுப்புச்சொல், சீத்தல், சீழ், சளி, லட்சுமி, அடக்கம், நித்திரை

சே- சிவப்பு, எருது, அழிஞ்சால் மரம்

சோ- மதில், அரண்

யா- ஒருவகை மரம், யாவை, அசைச்சொல்

நொ- வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு

து- உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்.

0 comments:

Post a Comment