இயலாமை - திறமை


மற்றவரின் இயலாமையை ஏசி வாழ்வதை மாற்றி
உங்கள் திறமைகளில் வாழுங்கள் ! அதுவே மனிதம் !
  Live in your plusses .! Rather than in others minuses .!
  

இதுவே மனிதம் (1) : தலைவன் யார் ?

எதிரியின் வலிமையை உற்றுணர்ந்து பாராட்டும் மனம் கொண்டவன் 
தோற்கடிக்க முடியாத தலைவனாய் வாழ்கிறான் ..!!

நீ நான் சிவம்


அழுகிற போது கடவுளைப் பழிக்கிறவன் மனிதன்..!! 

அவன் கடைசி வரை மனிதனாக மட்டுமே இருப்பான் ! 

எதுவந்த போதும் சிரிக்கின்ற மனிதன் - கடவுள் ! 

இவனும் கடைசி வரை கடவுளாகவே இருப்பான் ! 

 நான்  கறுப்பு செலையில சாமி இல்லை ன்னு சொல்லலிங்க !

செகப்பு நெஞ்சுலயும் கூட  இருக்குதுன்னு தான் சொல்றேன் !!

எது பெரிது - முல்லாவின் பதில்



               ஒரு நாள் அரசர் முல்லாவை அழைத்து,"முல்லா , பொய் மெய் இரண்டில் எது பெரிது " என்று கேட்டார் . அதற்கு., முல்லா சிறிது யோசித்து விட்டு " அரசே , மெய்யே பெரியது "என்று சொன்னார்.

            "அது எப்படி " என்று கேட்டார் அரசர் .அதற்கு முல்லா ,"அரசே, காதால் கேட்பது பொய், கண்ணால் காண்பதே மெய் . எனவே , பொய்யை விட மெய்யே உயரத்தில் இருக்கிறது "என்று கூறினார் 



                           நான் சொல்லும் நீதி : 

இது உண்மை இதெல்லாம் பொய் என்று உலகம் ஏற்கனவே எத்தனையோ விஷயத்தை எழுதி வைத்து விட்டது . அது சரி.! ஏன் நாம் அதை உண்மையா? பொய்யா? என்று சொல்லப் படுவதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள முயல்வதில்லை? உலகம் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்  ! உங்கள் பங்கிற்கு நீங்கள் யோசியுங்கள் !

எதில் நம்பிக்கை வைப்பது

                  
நண்பர் ஒருவர் முல்லாவைத் தேடி அவருடைய வீட்டிற்கு வந்தார் . அவர் முல்லாவிடம் . " முல்லா, இன்று ஒரு நாளைக்கு மட்டும் உங்கள் கழுதையை இரவலாக தந்தால் மிக உதவியாக இருக்கும். இன்று மாலையே திரும்பக் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கேட்டார் .

              முல்லா, தம்முடைய கழுதையை அவருக்கு இரவல் கொடுக்க விரும்பவில்லை.ஆதலால்,"அடடா,நீங்கள் சிறிது முன்பே வந்திருக்கக் கூடாதா , வேறு ஒரு நண்பர் வந்து இப்பொழுது தான் கழுதையை இரவல் வாங்கிக் கொண்டு போனார் " என்று கூறினார்.                                        

             வந்த நம்பர் வருத்ததுடன் கிளம்பிய போது ,வீட்டின் பின் பக்கத்திலிருந்து முல்லாவின் கழுதை கத்தியது . உடனே அந்த நண்பர் , " முல்லா,உள்ளே இருந்து கழுதை கத்து சப்தம் கேட்கிறதே" என்று முல்லாவிடம் கேட்டார்.
                                                                            
            பொய் சொல்லி ஏமாற்ற முடியாமல் கழுதை கத்திவிட்டதே எப்படி இதிலிருந்து தப்புவது என்று தவிக்காமல், நண்பரைப் பார்த்து, " ஒரு மனிதனின் வார்த்தையை நம்பாமல் ஒரு கழுதையின் வார்த்தையில் நம்பிக்கை வைக்கும் உங்களுக்கு என் கழுதையை இரவல் தர மாட்டேன் " என்று கோபமாகக் கூறி, கதவையும் சாத்திக்கொண்டு போய்விட்டார்.!

நீதி   : மனிதர்களை நம்புங்கள் ! அவர்களின் வார்த்தைகளை பொய்யாய் இருப்பினும்  நம்புங்கள் ! நீங்கள் அவர்களின் மேல் வைக்கும் நம்பிக்கை , அவர்களின் தவறுகளை அவர்களுக்கே உணரவைத்து உண்மை பேசும் படி திருத்தக்கூடும்! நம்புங்கள்! நம்பப் படுங்கள்!

எண்ணமே கடவுள் - அன்பே சிவம்

இருந்தால் !
கடவுள் இருக்கிறார் என்று நம்பும் 
ஆத்திகனாக இருங்கள் !


இல்லையேல்

கடவுள் இல்லவே இல்லை என்று 
தீர்க்கமாக நம்பும் 
இறைமறுப்பாளராய் இருங்கள்.!


அதை ஒழிந்து ,
கடவுள் இருக்கிறாரா இல்லையா ? 
என்று வெட்டிப் பேச்சுப் பேசியே
"எண்ணமே கடவுள்! அன்பே சிவம்!"
என்பதை மறந்து போகும் 
அறிவிலியாக மட்டும் இராதீர்கள்.!

நாத்திகனாவோ ஆத்திகனாகவோ 
இருப்பதில் தவறில்லை.! நீ ,
மனிதநேயமற்றுப் போவது தான்!

யார் கடவுள்



 மூன்று தலைமுறையும் உட்கார்ந்து 
சாப்பிடட்டும் என்று என் 
முப்பாட்டனோ பாட்டனோ 
எதையும் சேர்த்து வைக்கவில்லை.!

மகப்பிள்ளைகளின் மகிழ்விற்கு
ஊருக்கு மேற்க்கே
முன்னூறு  ஏக்கரை 
எழுதி வைத்துவிட்டுச் சாகவில்லை 
என் அன்புத் தாத்தா.!

மழைக்கும் ஒதுங்காத 
பள்ளிக்கூட  அறைகளில் 
மகனைப் படிக்க வைத்தார் 
என் தந்தை.!

காசில்லாமல் கஷ்டப்படும் அப்பா.! 
கான்வென்டில் அவர் 
கனவுகளை சுமந்து நான்.! 

பட்டிக்காட்டு பாட்டாளிக்கும் 
பாரின் கனவு பலிக்கணும் 
எட்டு வைத்து நீ நடடா,
ஏழு கடலென்ன எட்டுக் 
கடலையும் தாண்டலாம்!

உனக்கு நான் எனக்கு நீஎன்று 
இப்படி ஒரு தோழன் 
எவர்க்கும் கிடைக்காத வரம்.! 

இப்படி
நடப்பதை யாவும் ரசிக்கிற மனமிருந்தும் 
தோல்வியும் சோகமும் 
துரத்தத் தான் செய்கிறது  
நம்மை!

விதியைசொல்லி என்ன பயன்? 
விட்டுவிடு அது போகட்டும்.!
உன்னைத் தலைவனாக்கி பார்க்கும் வரை 
ஓயப்போவதில்லை நான்.!

ஒன்றுமே இல்லாத போதும் 
ஓவ்வொன்றிலும் இருக்கும் 
உண்மையை ரசி !
 
வாழ்க்கை கொஞ்சம் கூட கடினமில்லை!
அனுபவிக்கத் தெரிந்தவனுக்கும்!
அன்பு செய்யத் தெரிந்தவனுக்கும்!
ஏழை வீட்டில் பிறந்ததற்குப் 
பெருமைப்படு  !
எதுவுமில்லாமல் நீ உயர்ந்தால் தான் 
அது வெற்றி!
என்றார்.!
கடவுள் இருக்கிறாரோ 
இல்லையோ தெரியவில்லை!
எனக்கு என் தந்தை இருக்கிறார்.!
அது போதும்!


தலைவனாய் இரு



யாரும் விரும்பாத ஒரு செயலில்
உன் விருப்பங்கள் செல்வதாய்
இருந்தால் செய்.!
நியாயமென்று உன் மனம்
உன்னிடம் சொன்னால்
மட்டுமே செய்.!


ஒரு தடவை செய்.!
உலகம் எதிர்க்கும்.!
மறுமுறையும் செய்.!
மறுபடியும் எதிர்க்கும்.!


ஆயிரம் முறை செய்.!
அப்போதும் உலகம் எதிர்க்கும்.!


ஆயிரத்தி ஒன்றாவது முறை செய்!
உலகம் விசித்திரமானது.!
அதற்கு நல்லதும் கெட்டதும்
இன்னொருவர் சொல்லித்தான் தெரியும்.!


உன் பேச்சில் பிடிப்புடன் இரு.!


நீ நம்பினால் உலகம் மாறும்.!


பத்தாயிரம் எதிர்ப்புகளுடன்
அதற்கு மேல் ஒருமுறை
நீ பெறும் ஒரே ஒரு சிறிய ஆதரவும்.!
உன் சரித்திரத்தை திருத்தி எழுதும்.!
அப்போது உன் பெயர்
என்னவென்று மாறியிருக்கும் தெரியுமா?

" தலைவன்" 



நன்றியாய் இரு





 
 உன் வார்த்தைகளை எதிர்ப்பவர்க்கு
நன்றியாய் இரு.!
அவர்கள் தான் உன் வார்த்தைகளை 
நேர்த்தியாக்கும் சிற்பிகள் .!


எது தவறு ?

தனித்து நிற்பதில் 
தவறொன்றும் இல்லை.! 
தன்னம்பிக்கை இல்லாமல்
நிற்பதில்  தான்.! 

தன்னம்பிக்கையில் நிலைப்பதில் 
எந்தக்குறையும் இல்லை..!!
 அது  
தலைகணம் ஆகும் போது தான் !




பேரறிஞர் அண்ணா

நாட்டிலே நல்ல நல்ல தேவாலயங்கள் இருக்க 
தாங்க முடியாத தரித்திரம் தலை விரித்தாடுவதேன்!? 
பாரதமும் பகவத் கீதையும் இருக்க 
பக்த்தர்கள் அல்லலுருவதேன்! 
கேட்கிறோம் நாம் ! கேட்கக்  கூடாதா???

பேரறிஞர் அண்ணா .

தமிழில் எழுதிய காந்தியும் - கடிதமும்

தமிழ் மக்களோடு தொடர்பு கொண்டு தமிழர் நலனில் அதிக அக்கறை எடுத்துக் கொண்டு தென் ஆபிரிக்காவில் அவர்களுக்காகப் பாடுபட்ட காந்தி அடிகளாருக்கு நண்பராக விளங்கிப் பல போராட்டங்களிலும் ஈடுபட்டவர் தில்லையாடி டி.சுப்பிரமணிய ஆசாரி. அவர் தாயார் உடல்நலமில்லாமலிருந்தபோது காந்திஜி தென் ஆப்பிரிக்காவிலிருந்து 10 ரூபாய் பணவுதவி அனுப்பினார் அதில் காந்தி அடிகள் சுப்பிரமணிய ஆசாரிக்குத் தம் கைப்படத் தமிழில் கடிதம் எழுதினார். இக்கடிதத்தில் ஆவணி மாதம் என்று தமிழ் மாதத்தைக் குறிப்பிட்டு எழுதி இருப்பதும் தமிழில் கையொப்பமிட்டிருப்பதும் கவனிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் பாரதி மணிமண்டபம் அமைத்தபோது அதற்கான வாழ்த்தைத் தமிழில் எழுதினார். இவற்றைத் தவிர நீரில் எழுத்தொக்கும் யாக்கை என்பதையும் தமிழில் தம் கைப்பட எழுதியுள்ளார். மோ.க.காந்தி என்று பல சந்தர்ப்பங்களில் தமிழில் கையெழுத்திட்டுள்ளார்.

திருவள்ளுவர், ஒளவையார், கம்பர் மாணிக்கவாசகர், நந்தனார், தாயுமானவர் முதலிய தமிழ் ஞானிகளை அவர் முழுமையாக அறிந்திருந்தார்

தமிழ்நாட்டுக்கு பல முறை காந்தி அடிகள் வருகை புரிந்திருக்கிறார். தில்லையாடிக்குச் சென்று தம் நண்பர் சுப்பிரமணிய ஆசாரியை 1-5-1915 இல் அவர் இல்லத்தில் சந்தித்திருக்கிறார்.

மறுநாள் 2-5-1915 இல் அவருக்கு மயிலாடுதுறையில் தமிழ் மக்கள் பெரிய வரவேற்பை அளித்தனர். அவருக்கு அளித்த வரவேற்பு இதழ் ஆங்கிலத்தில் அமைந்திருந்தது. மகாத்மா ஆத்திரப்பட்டுச் சொன்னார். காங்கிரஸ் திட்டங்களில் சுதேசி பற்றிய தீர்மானம் இருக்கிறது. நீங்களோ உங்களுடைய வரவேற்பு உரையை ஆங்கிலத்தில் அச்சிட்டிருக்கிறீர்கள். ஆங்கிலத்தின் மீது எனக்கு வெறுப்புக் கிடையாது. ஆனாலும் தாய்மொழியைக் கொன்றுவிட்டு அதன்மீது (சமாதியின் மீது) ஆங்கில மொழியை வளர்த்தீர்களானால் நீங்கள் சரியான முறையில் சுதேசியத்தைக் கடைபிடிக்கவில்லை என்பதுதான் பொருள் என்று பேசினார்.

யாதும் ஊரே - யாவரும் கேளிர்

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;="To us all towns are one, all men our kin.


யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.


-கணியன் பூங்குன்றன்
(பாடல்192, எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூறு)


English Translation


"To us all towns are one, all men our kin.
Life's good comes not from others' gift, nor ill
Man's pains and pains' relief are from within.
Death's no new thing; nor do our bosoms thrill
When Joyous life seems like a luscious draught.
When grieved, we patient suffer; for, we deem
This much - praised life of ours a fragile raft
Borne down the waters of some mountain stream
That o'er huge boulders roaring seeks the plain
Tho' storms with lightnings' flash from darken'd skies
Descend, the raft goes on as fates ordain.
Thus have we seen in visions of the wise ! -
We marvel not at greatness of the great;
Still less despise we men of low estate."


Kanniyan Poongundran in Purananuru,
Poem 192 - written in Tamil 2500 years ago
English Translation by Rev. G.U.Pope in Tamil Heroic Poems

தமிழ்ச் செம்மொழி

தமிழ்ச் செம்மொழி :



tamil-name3உலகமொழிகளில் முதன்முதலில் கிரேக்கமும் இலத்தீனமும் செம்மொழிகள் என்று கருதப்பட்டன. கி.பி. 1800 – 1900 அளவில் வில்லியம் ஜோன்ஸ், மாக்சு முல்லர் போன்ற அறிஞர் பெருமக்கள் வடமொழியின் தொன்மை நூல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டதன் விளைவாக வடமொழியினைச் செம்மொழியாகக் கருதும் நிலை அமைந்தது. 1816இல் எல்லிஸ் என்ற அறிஞர் தென்னிந்திய மொழிகள் வடமொழியல்லாத மொழிக் குடும்பத்தைச் சார்ந்தவை என நிறுவினார். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் டாக்டர் இராபர்ட் கால்டுவெல் திராவிட மொழிக் குடும்பத்தின் சிறப்பியல்புகளை ஆராய்ந்து, அவற்றுள் தமிழ்மொழியின் தொன்மையினையும் வடமொழியினின்றும் தனித்து இயங்குதற்குரிய ஆற்றலையும் உலகறிய நிலைநாட்டினார். இவர் நிகழ்த்திய ஆராய்ச்சியின் அடித்தளத்தில்தான் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை தமிழ்த்தெய்வ வணக்கம் பாடியதும், பரிதிமாற்கலைஞர் (வி. கோ. சூரியநாராயண சாத்திரியார்) தாம் எழுதிய "தமிழ் மொழியின் வரலாறு" எனும் நூலில் தமிழ்மொழி உயர்தனிச்செம்மொழி என்ற கருத்தினை வலியுறுத்தியதும் அமைந்தன. இவர்களைத் தொடர்ந்து தனித்தமிழ் இயக்கத்தினைத் தமிழ்க்கடல் மறைமலை அடிகள் தொடங்கினார். இவ்வியக்கத்தினைத் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட பலரும் பேணி வளர்த்தனர். உலகின் முதல் செம்மொழி தமிழ் என்ற கருத்தினைப் பாவாணர் The Primary Classical Language of the World என்ற தம் நூலில் விளக்கியுள்ளார்.

கால்டுவெல் காலத்திற்கு முன்பே, வடமொழியிலும் வல்ல தமிழறிஞர்கள் வடமொழியில் காணப்படாத தமிழ்மொழியின் தனி இயல்புகளைக் கண்டறிந்து கூறினர். இவர்களுள், கி.பி 18 ஆம் நூற்றாண்டினராகிய மாதவச் சிவஞான முனிவர் முதலில் சுட்டத்தக்கவர். இச்சான்றோர் தொல்காப்பியப் பாயிரவிருத்தியில், “தமிழ்மொழி புணர்ச்சிக்கட்படும் செய்கைகளும், குறியீடுகளும், வினைக்குறிப்பு, வினைத்தொகை முதலிய சில சொல் இலக்கணங்களும், உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும், அகம் புறம் என்னும் பொருட்பாகுபாடுகளும் குறிஞ்சி, வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும், அவற்றின் பகுதிகளும், வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும், இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறப்படா” என்று எழுதியிருத்தல் எண்ணத்தக்கது.

தமிழ் மொழியையும் வடமொழியையும் ஒப்பிட்டு முறையாக ஆராய்ந்த முதலறிஞராகச் சிவஞான முனிவர் கருதுதற்கு உரியர்.

பன்மொழிப் புலமைமிக்க, புகழ்பெற்ற தமிழியல் அறிஞர்கள் பலரும் செவ்வியல் மொழிக்குரிய தகுதிகள் யாவும் தமிழ்மொழியில் நிரம்பப் பெற்றுள்ள நிலையினைத் தம் ஆய்வுநூல்களில் நிலைநாட்டியுள்ளனர்.

“இருபத்தாறாயிரத்து முந்நூற்று ஐம்பது அடிகளில் உருப்பெற்றுள்ள சங்க இலக்கியம், சிறந்த உலகச் செவ்வியல் மொழிகளின் வரிசையில் தமிழை உயர்த்துகிறது. தமிழர் பண்பாட்டின் விளைவாக விளங்கும் இம்மொழி இந்தியத் திருநாட்டில் ஒப்பற்றது. தனித்தியங்கும் ஆற்றலையும், தமிழ்மண்வாசனை கமழும் உயர்தரம் கொண்ட இலக்கியக் கொள்கையினையும், யாப்பியல், பாவியல், அணியியல் முதலிய இலக்கணங்களையும் பெற்று விளங்குவது.

tamil-nameசங்கச் செய்யுள் என்பது மொழியியல், யாப்பியல், நடையியல் ஆகியவற்றின் முழுமைபெற்ற வெளிப்பாடாகத் திகழ்வது. தமிழர் பண்பாட்டின் நனி சிறந்த கூறாகத் திகழும் சங்கச் செய்யுள் பிற மொழியாளரால் படியெடுக்க முடியாத விழுமிய இலக்கிய வெளிப்பாடாக இருப்பதுடன், செப்பமும் முழுமையும் வாய்ந்த படைப்பாகவும் திகழ்கிறது. இவ்வகையில், சங்கச் செய்யுள் உண்மையில் செவ்வியல் இலக்கியமாகும்" எனக் கமில் சுவலபில் குறிப்பிடுகிறார்.

உலகப்புகழ்பெற்ற மொழிபெயர்ப்பாளர் ஏ . கே . இராமாநுசன் மேலே கூறப்பெற்ற கருத்தினை வழிமொழிவதுடன், இந்தியச் செம்மொழிகள் இரண்டினில் வடமொழி வழக்கில் இல்லை என்றும் தமிழ்மொழி தொன்றுதொட்டு வழங்கிவரும் சிறப்புக்குரியது என்றும் கூறியுள்ளார்.

மேலே கூறப்பெற்ற மொழிவல்லுநர்களின் கருத்துகள் ஒருபுறமாக, வரலாற்றறிஞர்களும் புதைபொருளாய்வாளர்களும் சிந்துவெளி நாகரிகம் ஆரியர் வருகைக்கு முற்பட்டது என்றும், தொல்பழந்தமிழர் நாகரிகம் என்றும், அங்கு வாழ்ந்தோர் பேசிய மொழி செம்மொழித்தமிழின் மூலமொழி என்றும் நிலைநாட்டியுள்ளனர். திராவிடமொழிகளிலும் வல்ல மேலைநாட்டு வடமொழிப் பேராசிரியர்கள் டி. பர்ரோ, எம். பி. எமனோ உள்ளிட்டோர் வடமொழி வேதங்களில் காணப்படும் எண்ணற்ற தமிழ்ச் சொற்களை ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். பாணினியின் அட்டாத்தியாயி என்னும் வடமொழியின் மூல இலக்கண நூலுக்குப் பேருரை கண்ட காத்தியாயனர், பதஞ்சலி ஆகியோர் தமிழ் தொடர்பான தம் அறிவினைப் புலப்படுத்தியுள்ளனர். கிரேக்கம், ஈபுரு, சீனம், சப்பானியம், கொரியம், மலாய் உள்ளிட்ட உலக மொழிகளில் காணப்படும் பற்பல தமிழ்ச் சொற்களைத் துறைவல்ல அறிஞர் பெருமக்கள் ஆராய்ந்து வெளியிட்டுள்ளனர். மேலை, கீழை நாடுகளுடனும் தமிழ்மக்கள் கொண்டிருந்த பண்பாட்டு, வணிகத்தொடர்புகளை நாணயவியல், கல்வெட்டியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களுடன் ஆராய்ச்சிஅறிஞர்கள் நிலைநாட்டியுள்ளனர்.

எனவே, செம்மொழித்தமிழின் சிறப்பும் உலகமக்களுடன் தமிழர் கொண்டிருந்த தொடர்பும் தெள்ளிதிற் புலனாகும்.

அறிஞர் பெருமக்களும் மொழிவல்லுநர்களும் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகவே தமிழ் செம்மொழி என்ற கருத்தினைத் தளராது வலியுறுத்திக் கூறி வந்திருப்பினும், மாண்புமிகு தமிழக முதல்வர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் மேற்கொண்ட மதிநுட்பத்துடன் கூடிய விடாமுயற்சியின் விளைவாக இந்திய அரசு தமிழைச் செம்மொழியாக ஏற்றுக்கொண்டு 12.10.2004 இல் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்நன்னாள் தமிழர் வரலாற்றில் ஒரு பொன்னாள் ஆகும்.

அர்த்தமுள்ள தமிழின் ‘ஓர்’ எழுத்துக்கள்

அர்த்தமுள்ள தமிழின் ‘ஓர்’ எழுத்துக்கள்!


தமிழ் மொழி பலவித சுவை மிகுந்தது. அமிர்தம் போல இனிமையானது. கேட்க இனிமை, பேச அருமை, படிக்க எளிமை. தமிழ் கடலில் ஆழ்ந்து மூழ்கினால் நல் முத்துக்களை பெறலாம். இன்பத்தமிழ் மொழி பேசும் தமிழனாய் பிறந்ததே ஒரு பெரு மைதான். அதை உணரவேண்டிய தருணம் இதுதான். முத்தமிழ் வித்தகர் கலைஞர், தமிழுக்கு பெருமை சேர்க்க பெருவிழா நடத்தும் இந்த காலம் தமிழுக்கு பொற்காலம். உலக தமிழ் செம்மொழி மாநாடு நடக்கும் இந்த நேரத்திலாவது தமிழ் மொழியின் அழகையும், பெருமையையும் சற் றேனும் சிந்தித்து பார்ப்போம். தமிழன் பெருமைக்குரியவன் என்பதை உண ர்ந்து தலை நிமிர்ந்து நிற்ப்போம். அழகிய தமிழ் மொழியில் அற்புதங்கள் பல உள்ளன. எந்த மொழிக்கும் இல்லாத சிறப்பு தமிழ் மொழிக்கு உண்டு. அதில் ஒன்று “ஓர் எழுத்து ஒரு பொருள்“ என்னும் சிறப்பு ஆகும். அதாவது தமிழில் ஒரு எழுத்து கூட பொருள் தரக்கூடியது. இதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர். தமிழில் உள்ள 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் தனித்து நின்றாலும் பொருள் கொடுக்கும். அது எப்படி என்கிறீர்களா. அதுதான் நம் தமிழ்மொழியின் தனிச்சிறப்பு அந்த 42 எழுத்துக்களையும் அதன் பொருளையும் பார்ப்போம்.

ஆ- பசு, எருது, ஆச்சா மரம்

ஈ- பறக்கும் பூச்சி, தேனீ, வண்டு, அழிவு, அம்பு, அரைநாள், பாம்பு, கொடு

ஊ- இறைச்சி, உணவு, விகுதி.

ஏ- அம்பு, எய்யும் தொழில், இறுமாப்பு, அடுக்கு

ஐ- அழகு, ஐந்து, ஐயம், அசை, தலைவன், அரசன்

ஒ- சென்று தாக்குதல், மதகுநீர், ஒழிவு, பலகை

மா-பெரிய, நிலம், விலங்கு, மாமரம்

மீ- மேலே, ஆகாயம், மேன்மை, உயர்வு

மூ- மூப்பு(முதுமை),மூன்று

மே- மேல், மேன்மை

மை- கண்மை, கருமை, இருள், செம்மறி ஆடு, அஞ்சனம்

மோ- முகர்தல்

தா- கொடு, குறை, கேடு, குற்றம், பகை

தீ-நெருப்பு, இனிமை, அறிவு, இடம்

தூ- வெண்மை, இறைச்சி, பறவை இறகு

தே- கடவுள்

தை- தைமாதம், தையல், திங்கள்

பா& அழகு, பாட்டு, நிழல்

பூ- மலர், சூதகம்

பே- அச்சம், நுரை, வேகம்

பை- கைப்பை, பாம்பு படம், கொள்கலம், பசுமை

போ& செல்

நா& நாக்கு, தீயின் சுவாலை

நீ& நீ

நை- வருந்து, இகழ்ச்சி

நோ-நோவு, துன்பம், வலி

கா- சோலை, காப்பாற்று, பாதுகாப்பு, சரஸ்வதி, தோட்டம்

கூ- பூமி, ஏவல், கூழ், கூவு

கை- உடல் உறுப்பு, ஒப்பனை, செயல், துதிக்கை, படை, கைப்பொருள்,

கோ- வேந்தன், தலைவன், இறைவன், அரசன்

வா- வருகை

வீ- மலர், பூ, மகரந்தம், அழிவு, சாவு, வீழ்தல்

வை& வைக்கவும், வைக்கோல், கூர்மை, வையம்

வெ- வவ்வுதல்,

சா- சாதல், சோர்தல், பேய், மரணம்

சீ- வெறுப்புச்சொல், சீத்தல், சீழ், சளி, லட்சுமி, அடக்கம், நித்திரை

சே- சிவப்பு, எருது, அழிஞ்சால் மரம்

சோ- மதில், அரண்

யா- ஒருவகை மரம், யாவை, அசைச்சொல்

நொ- வருந்து, நோய், மென்மை, துன்பம், நொய்வு

து- உண், விகுதி, நடத்தல், உணவு, வகுத்தல்.

தமிழ்ச் செம்மொழி


1. செந்தமிழ் (செம்மொழியாகிய தமிழ்) எனுஞ்சொல் தமிழில் கிடைத்துள்ள மூலமுதல் நூலான, மூவாயிரம் ஆண்டுப் பழைய தொல்காப்பியத்திலேயே இடம் பெற்றுள்ளது.

2. தமிழ் எனுஞ் சொல்லுக்குக் கிபி 10ஆம் நூற்றாண்டில் எழுந்த பிங்கல நிகண்டு, 'இனிமையும் நீர்மையும் தமிழ் எனலாகும்' என்று பொருள் கூறுகிறது.

3. செந்தமிழ் என்பதற்குக் 'கலப்பற்ற தூயதமிழ்' என்று பொருள் தருகிறது தமிழ்ப் பேரகராதி.

4. செந்தமிழ் எனுஞ் சொல் உணர்வு நிலையில் இலக்கண வரம்பை வற்புறுத்துகிறது. செயல் நிலையில் செம்மொழி ஆக்கத்தை வற்புறுத்துகிறது. மதிப்பீட்டு நிலையில், இலக்கணத்தை வற்புறுத்தாவிடில் கிளைமொழிகள் தோன்றிப் புதுமொழிகளாக மாறும் என எச்சரிக்கிறது என்று மொழியியல் அறிஞர் செ.வை.சண்முகம் விளக்குகிறார்.

5. செம்மொழி எனுஞ் சொல்லை, அகநானூற்றின் 349 ஆம் பாடல் 'நடுநிலை தவறாத மொழி' எனும் பொருளில் ஆண்டுள்ளது.

6. தமிழ் எம்மொழிக்கும் தாழ்ந்து வளையாது தலைநிமிர்ந்து நின்று தன் தனித்தன்மையைக் காத்து, தன்னை அணைத்து அழிக்க வந்த வடமொழியையும் வலுவிழக்கச் செய்து. வாழ்ந்து வளர்ந்துவரும் மொழியாகும். ஆங்கிலம் இலத்தின் மொழிக்குக் கடன்பட்டிருப்பது போலவே தமிழ்மொழியும் சமற்கிருதத்திற்குக் கடன்பட்டிருப்பதாகக் கருதுவது அறவே பொருந்தாது. பொருள் விளக்கத்தைச் சாகவிடாமல் சொற்களைக் கைவிடுவது ஆங்கிலத்திற்கு இயலாது ஆனால், சமற்கிருதச் சொற்களுக்கு ஈடான சொற்செல்வங்களைத் தமிழ் அளவின்றிப் பெற்றுள்ளது. இது, முனைவர் இராபர்ட்டு கால்டுவெல் அவர்களின் ஆய்வு முடிவு.

7. தென்னாட்டின்கண் சிறந்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ்மொழி, எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும், உயர்தனிச் செம்மொழியே ஆம் என்பது உறுதி. இவ்வளவு உயர்வும் சிறப்பும் வாய்ந்த அருமைத் தமிழ்மொழியை உள்நாட்டுப் புன்மொழிகளோடு ஒருங்கெண்ணுதல் தவிர்த்து, வடநாட்டு உயர்தனிச் செம்மொழி சமற்கிருதம் எனக் கொண்டாற்போலத் தென்னாட்டு உயர்தனிச் செம்மொழி தமிழெனக் கொண்டு புகுதலே ஏற்புடையதாம். இது, 1887இல், சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் அப்போதைய தமிழ்த் துறைப் பேராசிரியரும் வடமொழி வல்லுநருமாகிய வீ.கோ.சூரிய நாராயண சாத்திரி என்ற பரிதிமாற் கலைஞர் முடிபு.

8. பிறமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் பேராற்றல் கொண்ட தமிழின் சிறப்பு வியப்பை அளிப்பதாகும். தமிழ், செய்யுள் வடிவிலும் உரைநடையிலும், கிரேக்க மொழிச் செய்யுள்களைக் காட்டிலும் தெளிவுடையதாகவும் திட்பமுடையதாகவும் கருத்தாழம் உடையதாகவும் விளங்குகிறது. தமிழ்மொழி நூல்மரபிலும் பேச்சு வழக்கிலும் இலத்தின் மொழியைக் காட்டிலும் மிகுந்த சொல்வளம் கொண்டது. இது, முனைவர் வின்சுலோ அவர்களின் முடிபு.

9. தமிழ்மொழியைச் செவ்வியல் மொழியாக உருவாக்குவதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் பழந்தமிழர்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். அவர்களின் இம்முயற்சி, கிரேக்கர்களுடன் தமிழர்கள் தொடர்பு கொள்வதற்கு முன்னரே ஏற்பட்டுள்ளது. இது, கில்பர்ட்டு சிலேடர் என்ற மொழியறிஞரின் முடிபு.

10. ஆப்பிரிக்கக் கண்டத்திலுள்ள செனல் நாட்டின் தாக்கர் பல்கலைக் கழகம் முதன்முதலில் தமிழ்மொழியைச் செவ்வியல் மொழி என்று முடிவு இயற்றி ஏற்றுக் கொண்டது.

11. தமிழ்நாட்டில், அண்ணர்மலை பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம். திருநெல்வேலியிலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்க்லைக்கழகம் ஆகியன தமிழைச் செம்மொழி என்று முடிபு இயற்றியுள்ளன.

 

போதுமிந்த பேதைமைக்காதல்

                                                      பெற்றோருக்கு செய்ய வேண்டிய
                                                         கடமைகளை நினைத்துப்பார் !
                                                           கனவில் கூட காதல் வராது !

நாம் தமிழர்

கோடி தமிழன் சாகட்டும் !
தன் குடியே கூட
கெட்டுப் போகட்டும் !
எவனோ யாரோ
எப்படியோ போகட்டும்
என்று வாழ்வோம் !

நமக்கு நம் வேலை
என்று வாழும்
எவனும் "தமிழன்" என்று
சொல்லிக்கொள்ளத்
தேவயில்லை ..!!

ஒன்றும் செய்யாதவன் தான்
தமிழன்
அதனால் தான் அடிமேல்
அடிவாங்கி கொண்டிருக்கிறான்
அங்கே.!

புலிகள் ஓநாய்களிடம்
வீழக்கூடுமோ ?
ஈழத்தில் நிகழ்கிறதே
நிமிடத்திர்க்கொருமுறை
இந்த கொடுமையும்!!

மத்திய அரசுக்கு
மதிகெட்ட அரசென்றால்
மாநில அரசு
மானங்கெட்ட அரசோ ??

உன் வீட்டு அடுப்பில்
உலை கொதிக்கிறது !
அங்கேயோ உயிரே
உலையாய் கொதிக்கிரதடா?

தன் வீடு ,தன் மக்கள்,
சோறு , சுகம்,
என்று வாழும் தமிழா!!

உன்னை அங்கு போய் போராட
ஒன்றும் சொல்லவில்லை  ..!!
விடு உனக்கு அந்த
தைரியமும் இல்லை!

ஒரு கேள்வி
ஒரு வருத்தம்
ஒரு கணம்
என்னவென்று கேட்டிருப்பாயோ
தமிழனின் நிலை ??

உயிர்வலியை உணரத்தெரியாத
உனக்கு
வீடெதற்கு ?
சோறெதற்கு?
உயிரெதற்கு?
உனக்கெல்லாம் எதற்கொரு
வாழ்க்கை ?   

ஒரே ஒரு கேள்வி கேள் !
உன் பின் ஒருத்தன்
அவன் பின்
இன்னொருத்தன் !
இன்னொருத்தன் பின்
வேறொருவனுமாய்!
இணைந்திடுவான் தமிழன் !

"இனி ஒரு உலகம் செய்வோம் "
"இனி ஒரு விதி செய்வோம் "

என்று வார்ர்தை வீரியம் எதற்கு ?

நூறு வார்த்தைகளுக்கு பதில்
ஒரு செயல் செய் போதும்!!
தூங்கிக்கொண்டிருக்கும்
 தமிழ் உணர்வுகளை
தட்டி எழுப்பும் விதை
நீயாய் இரு ..!!
உன் பின் நானிருக்கிறேன்..!!
உயிர் ஒன்று இருக்கிறது
தமிழுக்காய்..!!
ஒவ்வொரு சொட்டுமே
தமிழ்க்குருதி !!

எங்கே தமிழன் வீழ்கிறானோ
அங்கே தர்மம் வீழ்கிறது !!
எங்கே தமிழன் சாகிரானோ
அங்கே நியாயம் சாகிறது ..!!

" தமிழனென்று " சொல்லிக்கொள் !
கல்லும் மண்ணும்
தோன்றாத போதும்
சொல்லும் பொருளும்
இருந்ததே !!
அது உன் மொழி தான் !!
தமிழ்!!

தமிழனென்று சொல்!
தலை நிமிர்ந்த நில்!!
உரிமைகளை கேள்!
ஊருக்காய் வாழ் !

எர்னெஸ்டோ சே குவேரா

சே குவேராவின் பொன் மொழிகள் :

* நான் இறந்த பிறகு என் துப்பாக்கியை என் தோழர்கள் எடுத்து கொள்வார்கள் , அப்போதும் தோட்டாக்கள் சீறிப்பாயும் !!     
              
* மண்டியிட்டு வாழ்வதை விட , நின்று கொண்டே சாவது மேல் !

* என்னை சுட்டு வீழ்த்தத் துணிந்த கோழையே !, உலகில் மிக உன்னதமான பட்டம் ஒன்று இப்போது உனக்குரியதாகி விட்டது "உலகிலே முதன் முதலில் ஒரு மனிதனை சுடப்போகிறவன் நீதான் "

* உலகின் எந்த மூலையிலும் ஏகாதிபத்தியம் தலை தூக்குவதைக் கண்டு உங்கள் ரத்தம் சூடேறினால் நீ என் தோழன்” -சே


சேவின் உன்னத பதில் : 
க்யூபாவில் தான் உங்கள் புரட்சி வென்றுவிட்டதே. பிறகு ஏன் பொலிவியாவில் போராடுகிறீர்கள் என்ற கேள்விக்கு சே இப்படி பதிலளித்தார்,
 
"உண்மையில் நான் அர்ஜெண்டினாவை சேர்ந்தவன் மேலும் க்யுபாவை சேர்ந்தவன், பொலிவியாவை சேர்ந்தவன், ஆப்ரிக்காவை சேர்ந்தவன், ஆசியாவை சேர்ந்தவன், ஏன் அமெரிக்காவை சேர்ந்தவன் கூட. ஏனெனில் அடிமைப்பட்டு கிடக்கும் ஒவ்வொரு நாடும் என் தாய் நாடு. அவர்களுக்கு எனது போராட்டம் தேவையை இருக்கிறது. நானொரு கொரில்லா போராளி. அப்படி அழைக்கபடுவதைத்தான் நான் விரும்புகிறேன்"

கார்ல் மார்க்ஸ் தத்துவம்

உலகத் தொழிலாளர்களே !
ஒன்றுபடுங்கள்!
நீங்கள் இழப்பதற்கு
ஒன்றுமே இல்லை-
அடிமைத்தனத்தை தவிர!!
ஆனால் வெல்வதற்கு  இந்த
உலகமே இருக்கிறது!
-கார்ல் மார்க்ஸ் தத்துவம்

வசதியான ஏழையின் கவிதை

நானோ வசதி இல்லாமல்
வறுமையில் வாழ்கிறேன்
ஆனால்
வறுமையோ என்னிடம்
வசதியாய் வாழ்கிறது ..!!

நட்பு

சோகம் தனிமையில் கூட வரும்,
ஆனால் , உண்மையான சந்தோஷம்
நண்பர்களுடன் இருக்கும்போது
மட்டுமே வரும் !

மிகப்பெரிய ஆயுதம்

ஒரு மனிதனைத்
தாக்கும்
"மிகப்பெரிய ஆயுதம் "-
அவனுக்குப்
பிடித்த ஒரு
"உள்ளத்தின் மௌனம்" !!

ஓவியம்

சூரியன் வரைந்த
அழகான ஓவியம்
உன் நிழல்

வாழ்க்கை

கருவறையை விட்டுக்
கீழே இறங்கி
கல்லறையை நோக்கி
நடந்து செல்லும்
தூரம் தான் வாழ்க்கை!!

சே குவேரா வரிகள்

click over the image to view enlaged image :

நான் இறந்த பிறகு , என் துப்பாக்கியை தோழர்கள் எடுத்துக்கொள்வார்கள் .
அப்போதும் தோட்டாக்கள் சீறிப் பாயும்   !
- எர்னெஸ்ட் செ குவேரா

பிரபாவின் புதுவருட வாழ்த்துக்கள்


பிரபாவின்  புதுவருட வாழ்த்துக்கள்