இயலாமை - திறமை


மற்றவரின் இயலாமையை ஏசி வாழ்வதை மாற்றி
உங்கள் திறமைகளில் வாழுங்கள் ! அதுவே மனிதம் !
  Live in your plusses .! Rather than in others minuses .!
  

இதுவே மனிதம் (1) : தலைவன் யார் ?

எதிரியின் வலிமையை உற்றுணர்ந்து பாராட்டும் மனம் கொண்டவன் 
தோற்கடிக்க முடியாத தலைவனாய் வாழ்கிறான் ..!!

நீ நான் சிவம்


அழுகிற போது கடவுளைப் பழிக்கிறவன் மனிதன்..!! 

அவன் கடைசி வரை மனிதனாக மட்டுமே இருப்பான் ! 

எதுவந்த போதும் சிரிக்கின்ற மனிதன் - கடவுள் ! 

இவனும் கடைசி வரை கடவுளாகவே இருப்பான் ! 

 நான்  கறுப்பு செலையில சாமி இல்லை ன்னு சொல்லலிங்க !

செகப்பு நெஞ்சுலயும் கூட  இருக்குதுன்னு தான் சொல்றேன் !!

எது பெரிது - முல்லாவின் பதில்



               ஒரு நாள் அரசர் முல்லாவை அழைத்து,"முல்லா , பொய் மெய் இரண்டில் எது பெரிது " என்று கேட்டார் . அதற்கு., முல்லா சிறிது யோசித்து விட்டு " அரசே , மெய்யே பெரியது "என்று சொன்னார்.

            "அது எப்படி " என்று கேட்டார் அரசர் .அதற்கு முல்லா ,"அரசே, காதால் கேட்பது பொய், கண்ணால் காண்பதே மெய் . எனவே , பொய்யை விட மெய்யே உயரத்தில் இருக்கிறது "என்று கூறினார் 



                           நான் சொல்லும் நீதி : 

இது உண்மை இதெல்லாம் பொய் என்று உலகம் ஏற்கனவே எத்தனையோ விஷயத்தை எழுதி வைத்து விட்டது . அது சரி.! ஏன் நாம் அதை உண்மையா? பொய்யா? என்று சொல்லப் படுவதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள முயல்வதில்லை? உலகம் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்  ! உங்கள் பங்கிற்கு நீங்கள் யோசியுங்கள் !

எதில் நம்பிக்கை வைப்பது

                  
நண்பர் ஒருவர் முல்லாவைத் தேடி அவருடைய வீட்டிற்கு வந்தார் . அவர் முல்லாவிடம் . " முல்லா, இன்று ஒரு நாளைக்கு மட்டும் உங்கள் கழுதையை இரவலாக தந்தால் மிக உதவியாக இருக்கும். இன்று மாலையே திரும்பக் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கேட்டார் .

              முல்லா, தம்முடைய கழுதையை அவருக்கு இரவல் கொடுக்க விரும்பவில்லை.ஆதலால்,"அடடா,நீங்கள் சிறிது முன்பே வந்திருக்கக் கூடாதா , வேறு ஒரு நண்பர் வந்து இப்பொழுது தான் கழுதையை இரவல் வாங்கிக் கொண்டு போனார் " என்று கூறினார்.                                        

             வந்த நம்பர் வருத்ததுடன் கிளம்பிய போது ,வீட்டின் பின் பக்கத்திலிருந்து முல்லாவின் கழுதை கத்தியது . உடனே அந்த நண்பர் , " முல்லா,உள்ளே இருந்து கழுதை கத்து சப்தம் கேட்கிறதே" என்று முல்லாவிடம் கேட்டார்.
                                                                            
            பொய் சொல்லி ஏமாற்ற முடியாமல் கழுதை கத்திவிட்டதே எப்படி இதிலிருந்து தப்புவது என்று தவிக்காமல், நண்பரைப் பார்த்து, " ஒரு மனிதனின் வார்த்தையை நம்பாமல் ஒரு கழுதையின் வார்த்தையில் நம்பிக்கை வைக்கும் உங்களுக்கு என் கழுதையை இரவல் தர மாட்டேன் " என்று கோபமாகக் கூறி, கதவையும் சாத்திக்கொண்டு போய்விட்டார்.!

நீதி   : மனிதர்களை நம்புங்கள் ! அவர்களின் வார்த்தைகளை பொய்யாய் இருப்பினும்  நம்புங்கள் ! நீங்கள் அவர்களின் மேல் வைக்கும் நம்பிக்கை , அவர்களின் தவறுகளை அவர்களுக்கே உணரவைத்து உண்மை பேசும் படி திருத்தக்கூடும்! நம்புங்கள்! நம்பப் படுங்கள்!

எண்ணமே கடவுள் - அன்பே சிவம்

இருந்தால் !
கடவுள் இருக்கிறார் என்று நம்பும் 
ஆத்திகனாக இருங்கள் !


இல்லையேல்

கடவுள் இல்லவே இல்லை என்று 
தீர்க்கமாக நம்பும் 
இறைமறுப்பாளராய் இருங்கள்.!


அதை ஒழிந்து ,
கடவுள் இருக்கிறாரா இல்லையா ? 
என்று வெட்டிப் பேச்சுப் பேசியே
"எண்ணமே கடவுள்! அன்பே சிவம்!"
என்பதை மறந்து போகும் 
அறிவிலியாக மட்டும் இராதீர்கள்.!

நாத்திகனாவோ ஆத்திகனாகவோ 
இருப்பதில் தவறில்லை.! நீ ,
மனிதநேயமற்றுப் போவது தான்!

யார் கடவுள்



 மூன்று தலைமுறையும் உட்கார்ந்து 
சாப்பிடட்டும் என்று என் 
முப்பாட்டனோ பாட்டனோ 
எதையும் சேர்த்து வைக்கவில்லை.!

மகப்பிள்ளைகளின் மகிழ்விற்கு
ஊருக்கு மேற்க்கே
முன்னூறு  ஏக்கரை 
எழுதி வைத்துவிட்டுச் சாகவில்லை 
என் அன்புத் தாத்தா.!

மழைக்கும் ஒதுங்காத 
பள்ளிக்கூட  அறைகளில் 
மகனைப் படிக்க வைத்தார் 
என் தந்தை.!

காசில்லாமல் கஷ்டப்படும் அப்பா.! 
கான்வென்டில் அவர் 
கனவுகளை சுமந்து நான்.! 

பட்டிக்காட்டு பாட்டாளிக்கும் 
பாரின் கனவு பலிக்கணும் 
எட்டு வைத்து நீ நடடா,
ஏழு கடலென்ன எட்டுக் 
கடலையும் தாண்டலாம்!

உனக்கு நான் எனக்கு நீஎன்று 
இப்படி ஒரு தோழன் 
எவர்க்கும் கிடைக்காத வரம்.! 

இப்படி
நடப்பதை யாவும் ரசிக்கிற மனமிருந்தும் 
தோல்வியும் சோகமும் 
துரத்தத் தான் செய்கிறது  
நம்மை!

விதியைசொல்லி என்ன பயன்? 
விட்டுவிடு அது போகட்டும்.!
உன்னைத் தலைவனாக்கி பார்க்கும் வரை 
ஓயப்போவதில்லை நான்.!

ஒன்றுமே இல்லாத போதும் 
ஓவ்வொன்றிலும் இருக்கும் 
உண்மையை ரசி !
 
வாழ்க்கை கொஞ்சம் கூட கடினமில்லை!
அனுபவிக்கத் தெரிந்தவனுக்கும்!
அன்பு செய்யத் தெரிந்தவனுக்கும்!
ஏழை வீட்டில் பிறந்ததற்குப் 
பெருமைப்படு  !
எதுவுமில்லாமல் நீ உயர்ந்தால் தான் 
அது வெற்றி!
என்றார்.!
கடவுள் இருக்கிறாரோ 
இல்லையோ தெரியவில்லை!
எனக்கு என் தந்தை இருக்கிறார்.!
அது போதும்!