வெற்றி-தோல்வி


வெற்றி   என்பது   உன்னை   உலகத்திற்கு  அறிமுகம்   செய்வது  !!

தோல்வி என்பது  உன்னை   உனக்கே  அறிமுகம்  செய்வது !!!

கல்வி -அன்பு

கல்வி
ஒருவனை
அறிவாளியாக
மாற்றலாம் !,
ஆனால்
அன்பு
மட்டுமே
ஒருவனை
மனிதனாக 
 மாற்றும்

உணரவேண்டிய நியதி


நீ விரும்பாத எதுவும்
உன்னிடம்
நிலைப்பதில்லை !

நீ விரும்பிய எதுவும்
உன்னை விட்டு
விலகுவதில்லை !!!

கவலைப்படாதே !பெருமைப்படு!




                        உன் முதுகுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி 
                                                      கவலைப்படாதே !!!
         நீ அவர்களுக்கு  இரண்டு அடிக்கு முன்னால்  இருக்கிறாய் என்று
                                                       பெருமைப்படு!!!!

                                            - சுவாமி விவேகானந்தர்

உண்மையும் - புரிதலும்


                                    உன்னை உண்மையாக நேசிப்பவன் ,
                                            உன் தவறுகளை உன்னிடம்
                                                சொல்லிவிடுவான் !!
                                                            ஆனால் ,
                                          அதற்குப்பின் அவன் உனக்கு
                                     நல்லவனாகத் தெரியமாட்டான்!!!

தண்டனை - மன்னிப்பு


தண்டனை கொடுப்பதற்குத்
 தாமதம் செய் !,

ஆனால்,

மன்னிப்பு கொடுப்பதற்கு
யோசனை கூட  செய்யாதே !!!

- அன்னை தெரேசா

நிசமான நண்பர்கள்

உன் மௌனத்தின்
பின்னால்
உள்ள வார்த்தைகளையும் ,

உன் கோபத்தின்
பின்னால்
உள்ள அன்பையும்,
யாரால்
உணர முடிகிறதோ

அவர்கள் தான்
உன் உண்மையான
நண்பர்கள்!!!!

அம்மாவின் செருப்பு


             மீண்டும் ஒரு பிறவி இருந்தால் , செருப்பாக பிறக்க வேண்டும்!!
        அவள் காலில் மிதிபட அல்ல,அவளை ஒருமுறை சுமப்பதற்காக!!
                                                                  - அம்மா

சிரி - சிரிக்கவை


                                    ன் மனம் நோகும் போது     சிரி!!
                                   பிறர் மனம் நோகும் போது  சிரிக்கவை !!!
                                                                 - சார்லி சாப்ளின்

கெஞ்சும் அன்பு



                                           ரு நிமிடம் கூட எனைப்  பிரியாதே!!!
                                              என் அழகிற்குப் பாதுகாப்பில்லை !!
                                                முள்ளிடம் கெஞ்சியது ~ ரோஜா !

இதயம் சொல்வதை செய்


இதயம் சொல்வதை செய் ,
வெற்றியோ ?
தோல்வியோ ?
அதைத் தாங்கும் வலிமை ,
அதற்குதான் உள்ளது !!
-சுவாமி விவேகானந்தர்

சிந்தித்து வாழ்


             நாம் பேசுவதற்கு முன் பலமுறை யோசித்தால் நல்லது .,!
       நாம் பேசுவது பலரை  யோசிக்க வைத்தால்  இன்னும் நல்லது !!

பெண்

இதயமே இல்லாத பெண்ணிடம்
இதயத்தில் இடம் கேட்பது,
இலைகள் இல்லாத மரத்தில்
நிழலை தேடுவதை போல !!
பெண்

அமைதியான தூக்கம்

நீ என்னை பிரிந்தால் ,
நான் சோகமாக இருக்க மாட்டேன் !,
அழுது புலம்ப மாட்டேன் .,
அமைதியாக தூங்கிக்கொன்டிருப்பேன் ,
கல்லறையில் !!!

கல்லறை பக்கம்

காதலித்த போது
கைவிட்டு சென்றவளே !
கால் தவறி கூட என்
கல்லறை பக்கம் வந்துவிடாதே !,
என் கல்லறை கூட
கண்ணீர் சிந்தும் !!

உண்மை

பொய்யான உறவுகளுக்கு முன்னால்,
புன்னகையும் ஒரு பொய் தான் !
உண்மையான உறவுக்கு முன்னால்,
அழுகை கூட புன்னகை தான் !!

வார்த்தைகள் கிடைக்காத நொடிகள் :

நொடிகளில் தோன்றி மறையும்
நீர்க்குமிழி !

மழைவானத்தில் மஞ்சளும் சிவப்புமாய்
வானவில் !

விதைகளுக்கு வாழ்வளிக்காமல்
நுனிப்புல்லில் மேய்ந்திருக்கும்
மழைத்துளி !

விரும்பிய இதயங்களின் எதிர்பார்த்த
வார்த்தைகள் !

விரும்பாத இதயங்களின் எதிர்பாராத
அன்பு !

முதற் துளி கண்ணீரை பார்த்ததும்
மறுதுளி கண்ணீரை துடைத்தெறியும்
நட்பு !

உலகமே வெறுத்தாலும்
உன்னை விட்டுக்கொடுக்காத
அன்னை.!

தனக்கென நடக்கும் அத்தனையையும்
ரசிக்கிற மனிதனின்
மனங்கள் !!

வாழ்கையில் இந்தத்
தருணங்களை பெறுகையில்
வர்ணிக்க வார்த்தை இல்லாமல்
தினறிப்போகிறான்  
மனிதன் !

நானும் அப்படித்தான் !