எதில் நம்பிக்கை வைப்பது

                  
நண்பர் ஒருவர் முல்லாவைத் தேடி அவருடைய வீட்டிற்கு வந்தார் . அவர் முல்லாவிடம் . " முல்லா, இன்று ஒரு நாளைக்கு மட்டும் உங்கள் கழுதையை இரவலாக தந்தால் மிக உதவியாக இருக்கும். இன்று மாலையே திரும்பக் கொண்டு வந்து விடுகிறேன்" என்று கேட்டார் .

              முல்லா, தம்முடைய கழுதையை அவருக்கு இரவல் கொடுக்க விரும்பவில்லை.ஆதலால்,"அடடா,நீங்கள் சிறிது முன்பே வந்திருக்கக் கூடாதா , வேறு ஒரு நண்பர் வந்து இப்பொழுது தான் கழுதையை இரவல் வாங்கிக் கொண்டு போனார் " என்று கூறினார்.                                        

             வந்த நம்பர் வருத்ததுடன் கிளம்பிய போது ,வீட்டின் பின் பக்கத்திலிருந்து முல்லாவின் கழுதை கத்தியது . உடனே அந்த நண்பர் , " முல்லா,உள்ளே இருந்து கழுதை கத்து சப்தம் கேட்கிறதே" என்று முல்லாவிடம் கேட்டார்.
                                                                            
            பொய் சொல்லி ஏமாற்ற முடியாமல் கழுதை கத்திவிட்டதே எப்படி இதிலிருந்து தப்புவது என்று தவிக்காமல், நண்பரைப் பார்த்து, " ஒரு மனிதனின் வார்த்தையை நம்பாமல் ஒரு கழுதையின் வார்த்தையில் நம்பிக்கை வைக்கும் உங்களுக்கு என் கழுதையை இரவல் தர மாட்டேன் " என்று கோபமாகக் கூறி, கதவையும் சாத்திக்கொண்டு போய்விட்டார்.!

நீதி   : மனிதர்களை நம்புங்கள் ! அவர்களின் வார்த்தைகளை பொய்யாய் இருப்பினும்  நம்புங்கள் ! நீங்கள் அவர்களின் மேல் வைக்கும் நம்பிக்கை , அவர்களின் தவறுகளை அவர்களுக்கே உணரவைத்து உண்மை பேசும் படி திருத்தக்கூடும்! நம்புங்கள்! நம்பப் படுங்கள்!

0 comments:

Post a Comment