எது பெரிது - முல்லாவின் பதில்



               ஒரு நாள் அரசர் முல்லாவை அழைத்து,"முல்லா , பொய் மெய் இரண்டில் எது பெரிது " என்று கேட்டார் . அதற்கு., முல்லா சிறிது யோசித்து விட்டு " அரசே , மெய்யே பெரியது "என்று சொன்னார்.

            "அது எப்படி " என்று கேட்டார் அரசர் .அதற்கு முல்லா ,"அரசே, காதால் கேட்பது பொய், கண்ணால் காண்பதே மெய் . எனவே , பொய்யை விட மெய்யே உயரத்தில் இருக்கிறது "என்று கூறினார் 



                           நான் சொல்லும் நீதி : 

இது உண்மை இதெல்லாம் பொய் என்று உலகம் ஏற்கனவே எத்தனையோ விஷயத்தை எழுதி வைத்து விட்டது . அது சரி.! ஏன் நாம் அதை உண்மையா? பொய்யா? என்று சொல்லப் படுவதற்கான காரணங்களை தெரிந்து கொள்ள முயல்வதில்லை? உலகம் சொல்வது ஒரு பக்கம் இருக்கட்டும்  ! உங்கள் பங்கிற்கு நீங்கள் யோசியுங்கள் !

6 comments:

ப.கந்தசாமி said...

நல்ல சிந்தனை

Unknown said...

டாக்டர் . பி .கந்தசாமி ஐயா அவர்களுக்கு நன்றி.. நன்றி.. நன்றி...

அரிஅரவேலன் (Ariaravelan) said...

தேடுதலின்மையே காரணம். இதன் காரணமாகவே எண்ணற்ற சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் பின்பற்றுகிறோம். அற்புதங்களை நம்புகிறோம். “எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.” என்பதனை தேர்விற்கு மட்டுமே படித்ததால் வந்த வினையிது.

Chitra said...

நீங்க சொல்றதை சொல்லிட்டீங்க..... இது பொய்யா மெய்யா என்று இன்னும் சொல்லவில்லையே.....!!!!!

Uma Anandane said...

நல்ல சிந்தனை :)

Unknown said...

Uma @ Thanks uma ...
Chitra @ madam ... thnx ..
யரலவழள @ nandri ...

Post a Comment